ரூபக தாளம்- ஜதி

குறிப்பு :
1): இந்த ஜதியை மத்திம-சதுஸ்ரத்தில் 2 முறை சொல்ல வேண்டும்.
2): அதன் பிறகு துரித -சதுஸ்ரத்தில் 4 முறை சொல்ல வேண்டும்.
3): அதன் பிறகு மத்திம-திஸ்ரத்தில் 3 முறை சொல்ல வேண்டும்.

த,கு,த,(6) த,கிட தொம்,(6)
கிடகிடதொம்,(6) தரிகிடகிநகிட(4) கும்,(2) [தரிகிடகிநகிட = 8 சொல்லை மேல்காலமாக 4 சொல்லாக சொல்ல வேண்டும்]

த,தி,தக(6) த;, தொம்,(6)
தகதி,(4) கிடதக(2) த;, தொம்,(6) [கிடதக = 4 சொல்லை மேல்காலமாக 2 சொல்லாக சொல்ல வேண்டும்]

த,கு,த,(6) தரிகிடகிநகிட(4) கும்(2), [தரிகிடகிநகிட = 8 சொல்லை மேல்காலமாக 4 சொல்லாக சொல்ல வேண்டும்]

த;;,(6) த, தரிகிடகிநகிடகும்,(6) [த,தரிகிடகிநகிடகும், = 12 சொல்லை மேல்காலமாக 6 சொல்லாக சொல்ல வேண்டும்]
த, தரிகிடகிநகிடகும்,(6)
த, தரிகிடகிநகிடகும்,(6)

ரூபக தாளம் (முதல்-தட்டு,இரண்டாம்-தட்டு,மடக்கு) போட்டு பயிற்சி செய்கையில்,
மத்திம-சதுஸ்ரத்திற்கு : தகதிமி(4) தகதிமி(4) தகதிமி(4) என்று பயிற்சி செய்யவேண்டும்.
ஒரு அட்சரத்து நாலு சொற்கள்.

மேல்கால-சதுஸ்ரத்திற்கு : தகதிமி தகதிமி(8) தகதிமி தகதிமி(8) தகதிமி தகதிமி(8) என்று பயிற்சி செய்யவேண்டும்.
ஒரு அட்சரத்து எட்டு சொற்கள்.

மத்திம-திஸ்ரத்திற்கு : தகிடதகிட(6) தகிடதகிட((6) தகிடதகிட(6) என்று பயிற்சி செய்யவேண்டும்.
ஒரு அட்சரத்து ஆறு சொற்கள்.

தாளம் போட்டு சொல்கையில் அட்சரங்கள், சொற்கள் சரியாக பொருந்தி வருகிறதா என்று கவனிக்க வேண்டும்.
உதாரணமாக,

1): ஜதியின் முதல் இரு வரிகளை மத்திம சதுஸ்ரமாக சொல்கையில் தாளத்தில் வரும் மடக்கு சரியாக ”கி”ல் ஆரம்பித்து கிநகிட(2) கும்,(2) சரியாக 4 சொல்லில் முடியும்.
த,கு,த,(6) த,கிட தொம்,(6)
கிடகிடதொம்,(6) தரிகிடகிநகிட(4) கும்,(2)

2): ஜதியின் முதல் இரு வரிகளை மேல்கால சதுஸ்ரமாக சொல்கையில் தாளத்தில் வரும் மடக்கு சரியாக ”தொம்,”ல் ஆரம்பித்து தொம்,(2) தரிகிடகிநகிட(4) கும்,(2) சரியாக 8 சொல்லில் முடியும்.
த,கு,த,(6) த,கிட தொம்,(6)
கிடகிடதொம்,(6) தரிகிடகிநகிட(4) கும்,(2)

3): ஜதியின் வரிகளை மத்திம திஸ்ரமாக சொல்கையில்,முதல் தட்டில் த,கு,த,(6 சொல்), இரண்டாம் தட்டில் த,கிடதொம்,(6 சொல்) என்று ஒவ்வொரு அட்சரத்துக்கும் 6 சொல்லாக வரும்.
மத்திம திஸ்ரம் முதல் முறை ஆரம்பிப்பது முதல் தட்டில்
மத்திம திஸ்ரம் இரண்டாம் முறை ஆரம்பிப்பது இரண்டாம் தட்டில்(முதல் முறை சொல்வது முதல் தட்டில் வந்து முடியும்)
மத்திம திஸ்ரம் மூன்றாம் முறை ஆரம்பிப்பது மடக்கில்(இரண்டாம் முறை சொல்வது இரண்டாம் தட்டில் வந்து முடியும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *