தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்

தமிழினி வெளியீடாக வந்து, மொத்தமும் தீர்ந்து போன நூல்… தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சியிடம், மறுபதிப்பு போடச்சொல்லி பலமுறை கேட்கையில் ” போட்றுவோம் என்று புன்சிரிப்போடு கடந்து செல்வார்.

நாஞ்சில்நாடனிடம் கேட்கையில், “யோகேஸ்வரன்… எங்கிட்ட ஒரே ஒரு லைப்ரரி காப்பிதான் இருக்கு…” என்று சொன்னபிறகு சிரித்துக் கொள்வார்….

#விஷ்ணுபுரம்பதிப்பகம் ஆரம்பித்த பிறகு, அண்ணன் குவிஸ் செந்திலிடம் நான் வைத்த முதல் கோரிக்கை, இந்நூலை பதிப்பிக்க ஆவன செய்வது…

பேரர் பிறந்த குஷியில் செந்தில் அண்ணன் Senthil Kumar ஆசையை நிறைவேற்றி விட்டார். செயல்படுத்தியதற்கு விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் சம்வகை மீனாம்பிகைக்கு பிரத்யோக நன்றி..

அறம்,குமரித்துறைவி,ஆலம் வரிசையில் நண்பருக்கு பரிசளிக்க மொத்தமாக வாங்கி வைக்கும் நூல்பட்டியலில் இப்போது நாஞ்சிலாரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *