முந்தைய பகுதி : நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம்
”ஆன்சைட் கால் இன்னக்கி கேன்சல்……… நியூயார்க்ல ஏதோ டெரரிஸ்ட் அட்டாக்காம்……….. இன்னும் ரெண்டு மூணு நாளக்கி எந்த காலும் கிடையாது………”
அரைநாள் பள்ளிவிடுமுறையை ரோட்டோர மழைத்தண்ணீரை எத்தித்தள்ளி அனுபவித்தப்படி செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் 2001ல் வீட்டுக்கு கிளம்பிய எனக்கு
தெரிய ஞாயமில்லை 2006ல் கட்டிட சிதைவுகளின் குவியலினூடே நின்றுகொண்டு என் செயலை நினைத்துப்பார்க்கப்போகிறேன் என்பது…..
சென்ற வாரம் மீண்டும் ஒரு விஜயம்………… எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு முறை வரும் கண்ணீர்த்திரையை தடுக்க முடிவதில்லை……..
புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வளாகம் ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியது….
1. ஐந்து அலுவலக கட்டிடங்கள் (ஐந்தில் ஒரு கட்டிடம் 1,776 அடியில் அமெரிக்காவின் உயரமான கட்டிடமாக அமையப்போகிறது. 2001ல் தாக்கப்பட்ட டிவின் டவர்ஸின் உயரம் 1,350 அடி. நியூயார்க்கில் இருக்கும் எம்ப்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரம் 1,250 அடி)
2. நினைவகம் மற்றும் அருங்காட்சியகம்
3. தொடர்வண்டி போக்குவரத்து மையம்
4. வணிக வளாகம்
5. கலைப்பேரரங்கம் (”Performing arts center” ஐ தமிழ்ப்படுத்த நான் படுத்தியதை பழமைபேசி மன்னிப்பாராக….)
21ம் நூற்றாண்டின் தலைசிறந்த கட்டிடங்களாக இவை இருக்கவேண்டுமென்பதில் முழுமுனைப்போடு செயல்படுகிறது கட்டுமானப்பொறுப்பேற்றிருக்கும் சில்வர்ஸ்டீன் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம்.
சிறப்பான செயல்பாட்டிற்க்காக கட்டுமான நிறுவனத்தின் தலைவர் லேரி சில்வர்ஸ்டீன் 2010ம் ஆண்டிற்க்கான சிறந்த தொழிலதிபர் விருதைப் பெற்றுள்ளார்.
உலக வர்த்தக மையத்தின் தற்போதைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தை நோண்ட, கொத்தனார் இன்னக்கி எத்தனை அடி பூச்சு பூசினார், சித்தாள் எத்தனை சட்டி மண் சலித்தார் என்கிற ரேஞ்சுக்கு விலாவரியாக அப்டேட் செய்கிறார்கள்…
{{{
புகைப்படங்கள் : என் காமிராவில் எடுக்கப்பட்டவை.
WTC பற்றிய தகவல்கள் : கூகுளாண்டவர்….
}}}