இரண்டாயிரத்து ஒன்பதின் மே மாதம். அமெரிக்க வாழ்க்கை. இந்தியாவிலிருந்து வந்திருந்த அப்பா அம்மாவிற்காக தமிழ் சேனல் இணைப்பு கொடுத்திருந்த சமயம். “மட்டகளப்பில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில்… ” என்று ஆரம்பிக்கும் ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் செய்தியை, பால்ய பருவத்தின் அனேக நாட்களில் கேட்டு வளர்ந்தவன் தான். திடீரென பார்க்க நேர்ந்த செய்தி…. இன்றளவும் மனக்கண்ணை விட்டு அகலாமல் நின்றிருக்கும் நிகழ்வு. பிரபாகரனின் மரண செய்தி. பல புத்தங்களை படித்தாயிற்று. இரண்டாயிரத்து இருபத்தி ஒன்னிலும் ஈர்க்கத்தான் செய்கிறார். “வாழ்வும் மரணமும்” என்ற உபதலைப்போடு பிரபாகரனின் […]
Tag: புத்தகம்
அவரும் நானும்
பல்லிவாலில் தொடங்கி முதலைவாலில் முடியும் பெரும் பட்டியல் தமிழ் புத்தக வகைமையில் உண்டு. 1) : இந்த புத்தகம் சுயசரிதைக்கான வடிவை, இலக்கணத்தை கொண்டிருக்கிறதா? 2) : அவரைப்பற்றிதான் எல்லாம் தெரியுமே? இந்த புத்தகத்துல அப்படி என்னத்த இதுவரைக்கும் நாம கேள்விப்பட்டிறாத தகவல் இருந்துவிடப்போகுது?அனேகரும் இரண்டாம் கேள்வியை மனதில் எழுப்பிக்கொண்ட பிறகே, இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பார்கள். இதற்கான பதிலை முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர்.முதல் கேள்விக்கு வருவோம்…. “ஏண்ணே… கலைஞர் தனிப்பேச்சில உங்ககிட்ட சொன்னத எதுக்கு பொதுவெளியில […]
நான் ஷர்மி வைரம்.
கயிற்றின்மேல் நடக்ககூடிய சமாச்சாரம்.கொஞ்சம் பிசகியிருந்தாலும் எதிர்மறை பரிமாணம் கொண்டிருக்கும்.”நான் ஷர்மி வைரம்”. இதுதான் தலைப்பு. முப்பரிமாண கதைசொல்லல்,” அவன்” என்றொரு நான்காவது திரி. அது பற்றிக்கொள்கையில் வேகமெடுத்து முடிவுக்கு வரும் நாவல். கதைசொல்லியின் வலிகளை,சந்தோஷத்தை கடத்தும் எழுத்துநடை.அடுத்தது என்ன? என்ற உந்துதலோடு முடியும் அத்தியாயங்கள்.நேர்த்தியாய் கட்டமைக்கப்பட்டு கிளைமாக்ஸில் கட்டவிழும் புதிர்.பிரத்யோக முன்சீட் வைக்கப்பட்ட டிவீஎஸ் எக்ஸெல் வண்டியில் கடல்காற்று முகத்திலறைய மகிழ்ந்திருந்த தருணங்கள், கண்ணாடி தடுப்புகளுக்குள் மாட்டி சுழலும் மின்மினிபோல் மாறியது ஏன்?. அதன்பின்னான காதல்,காமம்,கவலை,கண்ணீர்.திரைத்துறை வாய்ப்பு […]
கங்காபுரம்.
கங்காபுரம்அ.வெண்ணிலா எழுதிய வரலாற்று நாவலின் மதிப்புரை. எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. https://www.jeyamohan.in/136575/ ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட நாவல். முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு,எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது. இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாக ஊற்றுமுகமாக அமையும் தருணங்களை, அதனூடாக […]