சற்றே நீண்ட பதிவு… ஹம்சத்வனியில் “வாதாபி கணபதிம்” வாசித்து முடிந்த கையோடு, திருமண தம்பதிகளுக்கு கை கொடுக்க, மேடை ஏறிவிடுவீர்கள் எனில் முதல் இரு பத்திகளோடு முடித்துக்கொள்ளலாம். திருப்புகழ் பாடி நிறைவு செய்கையில் மட்டும், வாசிப்பவர்களை நிமிர்ந்து நோக்குபவராயின் நேராக கடைசி பத்திக்கு செல்லலாம். தனி ஆவர்த்தர்தனத்துக்கு மட்டும் தனி கவனம் கொடுப்பவர் எனில் பதிவின் மத்திமத்தில் ஆரம்பிப்பது உத்தமம். ஆரம்ப ஆலாபனை முதல், மங்கள முடிவுவரை, முழு கச்சேரியையும் கேட்டு உய்பவர் எனில் முழுமையாய் தொடரவும். […]