தண்ணீர்.

”அசோகமித்திரனின் கதைகளில் யாரும் சண்டையிடுவதோ, உரக்க விவாதம் செய்துகொள்வதோ இல்லை. மத்தியதர மனிதர்கள் தங்கள் நெருக்கடிக்குள் உழன்றபடியே மீட்சிக்காக காத்திருக்கிறார்கள்,”. ”100 சிறந்த சிறுகதைகள்” தொகுப்பில் அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை. “தண்ணீர்” நாவல் எஸ்.ராவின் முன்னுரையை வழிமொழிகிறது. மத்தியதர சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரை மையமாக வைத்து நடைபெறும் சம்பவங்கள், அதிகார தோரணைகள், அத்துமீறல்கள் என அன்றாடங்களை அழகாக எழுத்தில் காட்சிபடுத்தியிக்கிறார். 1971ல் எழுதப்பட்டிருந்தாலும் 2015லும் நம்மால் கதையின் சூழ்நிலைகளுக்குள் பொருத்திக்கொள்ள முடிகிறது. […]

Read More…

வாடிவாசல் : சி.சு.செல்லப்பா

1950களில் எழுதப்பட்ட கதை. தனது தந்தை செல்லியன் குடல் சரிந்து இறந்துபோக காரணமான வாடிபுரத்து சமஸ்தானத்து காளை ”காரி”யை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் பிச்சி, செல்லியனின் வீரதீரபிரதாபங்களை அவரின் மகனென்று தெரியாமல் பிச்சியிடமே விவரிக்கும் உள்ளூர்கார கிழவர். முதலாவதாய் திட்டிவாசலை தாண்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் செல்லாயி கோயில் காளை, இருபுறமிருந்தும் பாய்ந்து அணையவருபவர்களை சீரி, திமிலை சிலிர்ப்பியபடி ஆற்றுமணல் நோக்கி ஓட்டமெடுக்கும் காளைகள். அணைமரத்தோடு நெஞ்சணைத்து “காரி”யை எதிர்பார்த்தபடி பிச்சி, மச்சானின் எண்ணம் நிறைவேற தோள்கொடுக்க அருகில் […]

Read More…

மகாராஜாவின் ரயில் வண்டி : அ.முத்துலிங்கம்

மொழிப்பெயர்ப்பு கதைகளையும், பேட்டிகளையும் படித்திருந்தாலும், ரயில் வண்டியின் மேல் நீண்டநாட்களாக ஒரு கண் இருந்தது. காலச்சுவடில் முத்துலிங்கத்தின் மூன்று புத்தகங்கள் இருந்தாலும் ஆசையோடு எடுத்தது மகாராஜாவின் ரயில் வண்டியை. எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்றால் பெருமூச்சையே பதிலாக கொடுக்கலாம். புத்தக தலைப்பில் ஆரம்பித்து மொத்தம் இருபது சிறுகதைகள். ”லாஜிகல் எண்ட்” என்ற வார்த்தை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும் போல, பாதியில் ஆரம்பித்து படக்கென்று முடியும் கதைகள். ஒரு மென்சோகம் அனைத்து கதைகளிலுமே இழையோடுகிறது. கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அகாலத்தில் […]

Read More…

அப்பம் வடை தயிர்சாதம் : பாலகுமாரன்

புரோகிதத்தில் ஆரம்பித்த ஒரு தலைமுறை, ஓட்டல் நடத்தி, வணிகம் செய்து ஐந்தாம் தலைமுறை வாரிசுக்கு அமெரிக்க மருத்துவமனையில் வேலை நியமனம் கையில் கிடைக்கிறது. தம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு குடும்ப சகிதமாய் தஞ்சை ஜில்லாவிற்க்கு பயணிக்கிறார்கள். ஐந்தாம் தலைமுறை வாரிசு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணும் உடன் பயணிக்கிறார். நான்காம் தலைமுறை பாட்டி ஒருவர் “எங்க பரம்பரை எப்பேர்பட்டது தெரியுமாக்கும்” என்று வீட்டுக்கு மாட்டுப்பொண்ணாய் வரப்போகும் பெண்ணிடம் விவரிப்பதாய் நகர்கிறது கதை. புத்தகம் முழுவதும் விவரணை,விவரணை,விவரணை. கதையில் […]

Read More…

நெடுஞ்சாலை : கண்மணி குணசேகரன்.

2011 வருடத்தில் தேடி அலைந்து, டிஸ்கவரி வேடியப்பனிடம் பார்க்கிறபோதெல்லாம் “தல எப்படியாவது உசார் பண்ணுங்க” என்று சொல்லிவைத்து. க‌டைசியில் அவ‌ரும் கைவிரிக்க‌ அவ்வருட புத்த கண்காட்சியில் தமிழினி ஸ்டாலில் விசாரிக்க, “ஒரே ஒரு காப்பி இருக்கு சார், இருங்க எடுத்து தரேன்” என்று மேஜைக்கடியில் குனிந்தவர்,என்னைப்பார்த்தவாறு எழும்போதே எனக்கு நிலவரம் தெரிந்துவிட்டது. “கடல்லியே இல்லியாம்” என்று சொல்லப்பட, கடைசி சான்ஸாக கண்மணி குணசேகரனிடமே தொலைபேசியில் விசாரிக்க “அத்த ஏ கேக்குரீங்க தம்பி,எங்கிட்ட மிச்ச இருந்ததே மூணு காப்பி, […]

Read More…

“காகிதப் படகில் சாகசப் பயணம்” – புத்தகத்தைப் பற்றி….

தன்னுடைய இருபத்தைந்தாண்டுகால வாழ்கையோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளராக தான் பெற்ற அனுவங்களையும், இடையில் வேறு பாதைகளில் பயணித்தபோது கிடைத்தவற்றையும் தொகுத்தளித்திருக்கிறார். ஒரு முழுமையான தொகுப்பாக இல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமே. தான் நினைத்தவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை போல எழுத நினைத்தும் சில பல சாயங்கள் வெளுத்துப்போகும் அபாயத்தினால் தவிர்த்துவிட்டதாக பதிவுசெய்திருக்கிறார். எழுதி வெளியிட்டபின் சுஜாதாவிடம் தான் கேட்க நினைத்த, கேட்டதும் கிடைத்த உணர்வு போல (கருணாவின் வார்த்தைகளில் “மனதை அறுத்துக்கொண்டிருந்த முள் கழன்று காலுக்கு கீழே விழுந்ததாய்”) கண்டிப்பாய் […]

Read More…

இருமண்வெட்டிகள்…

திரு ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளுக்கு, வ‌ண‌க்க‌ம். தங்களுடைய பதிவு ஒன்றில் மண்வெட்டியை பற்றி எழுதியிருந்தீர்கள். நெடுநாட்களாய் என் மனதில் இருக்கும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. தாங்கள் மண்வெட்டியை அவதானித்து எழுதியிருப்பதால் தங்களிடம் கேட்கத்தோன்றியது. விடை கிடைத்தால் மகிழ்ச்சி. “இல்லை என்ற பதில்” கிடைத்தாலும் மகிழ்ச்சியே… ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தற்போதைய தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்) வயல்வெளிகள் மற்றும் கட்டுமானம் செய்யும் இடங்களில் பயன்படுத்தப்படும் மண்வெட்டியை தாங்கள் கண்டிருக்கக்கூடும். சோழமண்டலத்தின் மருமகனானதால் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் […]

Read More…

‘வீடு திரும்பல்’ மோகன்குமாரின் “வெற்றிக்கோடுகள்” : ஒரு விமர்சன‌ பார்வை…

படிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார். ப‌டித்து முடிக்காம‌ல் வைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளை முடித்த‌ பிற‌கே புது புத்த‌க‌ங்க‌ள் வாங்க‌ வேண்டும் என்ற‌ விர‌த‌த்தை சற்றே த‌ள‌ர்த்த‌ வைத்த‌து மோக‌ன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்க‌வ‌ரி சென்று மோக‌னையும் சுரேகாவையும் பையில் அடைத்த‌பிற‌கும் ம‌ன‌சு அலைபாய‌,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க‌.நா.சுவும்,வ‌ண்ண‌நில‌வ‌னும் இட‌ம் பிடித்துக்கொண்டார்கள். வீடு திரும்பியதும் கையில் எடுத்தது […]

Read More…

ஒரு புளியமரத்தின் கதை.

ஒரு புளியமரத்தின் கதை : என் பார்வையில்… ஒரு புளிய‌ம‌ர‌த்தை க‌தைக்க‌ருவின் நாய‌க‌மாக‌ ( அஃறிணை???) கொண்டு இப்ப‌டி ஒரு ப‌டைப்பை உருவாக்க‌ முடியுமா? என்று எல்லோருக்கும் உருவாகும் ச‌ந்தேக‌ம் என்னுள்ளும் வ‌ந்த‌தில் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ ஏதுமில்லைதான். க‌தையின் ஆர‌ம்ம‌ க‌ட்ட‌ங்க‌ளில் ப‌னிப்ப‌ட‌ல‌மாய் ம‌ன‌தில் உருவ‌க‌ம் பெற்ற‌ புளிய‌ம‌ர‌ம்(வேப்ப‌ம‌ர‌ம்?), கொப்ளான் வெட்ட‌ முய‌ற்சிக்கையில், தாமோத‌ர ஆசானுடன் நானும் மனதினூடே போராடுகையில் கொஞ்சமாய் பதிய ஆரம்பித்து, தேர்தல் நேரங்களில் எப்போது முடுவுகட்டுவார்களோ என்ற பதபதைப்புடன் வாசிப்பை தொடர்ந்து, தாய்தடியில் கூலி […]

Read More…

21-12-2012 : “பிரபஞ்ச அஸ்தமனம்”.

முழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்கையில் மணி 5.40. வேகவேகமாக வந்து டிவியை ஆன் செய்து, ரிமோட்டை தட்டுகையில் ஒரு வித பயம் கலந்த படபடப்பு…. 0,1,2,3…… 99               98,97,96……. 3,2,1,0. ம்… ஒன்னுலியும் ஒன்னும் காணோம்…. டிவியை மியூட்டில் போட்டுவிட்டு வ‌ந்து ப‌டுத்துவிட்டேன்… இப்ப‌திவை எழுதும் நேர‌ம் இர‌வு 7.47. வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற‌க்கூடிய‌ எந்த‌வித‌ நிகழ்வும் இன்றைய‌ மீதி பொழுதினில் ந‌ட‌ந்துவிட‌க்கூடிய‌ சாத்திய‌க்கூறுக‌ள் மிக‌ மிக‌ குறைவே… 21-DEC-2012. பிர‌பஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது….. கடைசி பதிவை எழுதிக்கொண்டிருக்கும் […]

Read More…