வெண்முரசு வாசிப்பனுபவம்

அன்பின் ஜெ,வணக்கம். வெண்முரசு என்ற தலைப்பில் மகாபாரதத்தை தொடர் நாவல்களாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.இதுவரை 13 நாவல்கள் முடிந்துவிட்டது, பாராட்டுக்கள்!!! ,14வது நாவலை தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!!!. வெண்முரசைப்பற்றி முழுதும் அறியாமல் வெறும் முறைமைச்சொற்களாலான மேற்கண்ட வரிகளே 2017 மார்ச் வரை என்னுடைய புரிதல். ஒத்திப்போடபட்டுக்கொண்டே இருந்த அந்த தருணம் தொடங்கியது சென்ற மார்ச் மாத இறுதியில் ”கீழ்வாலை குகை ஓவியங்கள்” பார்க்க சென்ற பயணத்தின் ஒரு புள்ளியில். மங்கிய ஒளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு குகை ஓவியங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் “ஏம்பிரபு, வெண்முரச […]

Read More…

கங்காபுரம்.

கங்காபுரம்அ.வெண்ணிலா எழுதிய வரலாற்று நாவலின் மதிப்புரை. எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. https://www.jeyamohan.in/136575/ ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட நாவல். முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு,எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது. இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாக ஊற்றுமுகமாக அமையும் தருணங்களை, அதனூடாக […]

Read More…

மூன்றுவிர‌ல்…

சென்னை, டைடல் பார்க்.வடகிழக்காய் ஓங்கி நிற்க்கும் கட்டிடத்தின் ஆறாவது தளம். மாலை நேர தேநீர் இடைவேளைகளில் அந்த 10க்கு 8 செவ்வக பகுதியை கடந்துசெல்கையில் கண்கள் அன்னிச்சையாக அவரை தேடும். ஸ்பீக்கர் போன் வழியே தெறித்துக்கொண்டிருக்கும் கரகரப்பான வெளிதேசத்து குரல்களுக்கு காதையும், லேப்டாப் ஸ்கிரீனுக்கு கண்ணுமாய், இடது கையால் மோவாயை தாங்கியபடி அவர்…. இன்றைக்கு பேசிவிட‌லாம் என்று ஒவ்வொருமுறை நினைத்தாலும் அந்த‌ க‌ர‌க‌ர‌குர‌ல்க‌ள் அமைதியாவ‌த‌ற்கான‌ சாத்திய‌கூறுகள் புலப்படாமல் கடந்துசென்றுவிடுவதுண்டு. பிறிதொருநாள் சந்திக்கவிழைந்து அனுப்பிய செய்திக்கு “i am […]

Read More…

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் – பாரதி மணி.

”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”.”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம். ”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமலும் […]

Read More…

செம்பருத்தி…

அண்ணன் தம்பி மூவர், அவர்தம் வாழ்க்கைத்துணைகள், கொண்டதும் பெற்றதும். இவர்களை சுற்றி சுமார் 35 வருடங்களுக்கு நடக்கும் சம்பவங்கள். இவைகளே நாவலின் அடிநாதம். காலயெந்திரத்திலேறி சென்று கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடச்செய்யும் தி.ஜா வின் வசீகர எழுத்து மற்றும் சொல்லாடல்கள்… கதை,கதாபாத்திரங்கள்,கால சூழ்நிலைகள் (முதற்பதிப்பு 1968) இம்மூன்றையும் ஒரு புள்ளியில் இணைத்து அதை நேர்கோடாக நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை கொண்டுசெல்வதென்பதை நினைத்து பார்த்தாலே மூச்சு முட்டிக்கொண்டுவருகிறது (தி.ஜாவின் பாணியிலே). ”’உடனே புறப்பட்டு வரவும்,அவசரம்.’ தந்தி அடிக்கிறவர்கள் செய்தியை […]

Read More…

இரயில் புன்னகை.

1982-84ல் வெளியான 8 கதைகளின் தொகுப்பு. ”கச்சேரிக்கிடையே என்னத்த வாயில போட்டுக்கிறாருன்னு போயி பாத்திட்டு வா” அரியக்குடியின் தோடியில் லயிக்காமல் அவரின் தொண்டையில் கவனம் குவித்த சுஜாதாவின் மாமா, தன்னுடைய தொல்காப்பிய மேற்கோள்களை புறந்தள்ளி மூச்சிரைப்பை முக்கியமாக்கிய எழுத்தாள நண்பர் என தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் ஆரம்பிக்கிறது அவதானிப்பு பற்றிய சுஜாதாவின் முன்னுரை, முதல் கதை “இரயில் புன்னகை”. தமிழக இளைஞனொருவன் பம்பாயின் ஜனத்திரலில் மெற்க்கொள்ளும் ஒரு ரயில் பயணம், சற்றுமுன் பார்த்து புன்னகைத்த அந்த தமிழ் […]

Read More…

நகரம்.

1971-72 காலகட்டங்களில் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான 14 கதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் தலைப்பான “நகரம்” கதை நகரத்தின் அரசாங்க ஆஸ்பத்திரி ஒரு கிராமத்து பெண்ணுக்கு எப்படி அன்னியப்பட்டு இருக்குறது என்பதை அழகாய் உணர்த்துகிறது. 40 வருடம் கழித்தும் நம்மால் இயல்பாக கதைக்களத்தையும் அதன் சூழலையும் நிகழ்காலத்தில் பொறுத்திப்பார்க்க இயலும். வாத்தியார் வாத்தியார் தான்…. நகரம். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ். ரூ.75. […]

Read More…

சஞ்சாரம்.

ஆவணப்படமாகவோ, ஆராய்ச்சிக்கட்டுரையாகவோ வந்திருக்க வேண்டிய கரு. தன்னுடைய களப்பணியினாலும், தேணுகா, பி.யெம் சுந்தரம் முதலிய இசை விமர்சகர்கள் வழி திரட்டிய தகவல்கள் மூலம் ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவின் கலைஞருக்கு இயல்பாய் கிடைக்கும் மரியாதையும் கவுரவமும் கரிசல்மண்ணின் கலைஞர்களுக்கு மறுக்கப்படுவதையும் அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதையும் கொஞ்சம் அதிகமான புனைவுகள் சேர்த்து நாவலாக்கியிருக்குறார் எஸ்.ரா. பக்கிரி, ரத்தினம். கரிசல்மண்ணின் நாதஸ்வர கலைஞர்கள். கோவில் திருவிழாவிற்க்கு வாசிக்க செல்லும் இவர்கள், முதல்மரியாதை சம்பந்தமாக இரு ஊர்காரர்களுக்கிடையே ஏற்படும் தகறாரில் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆத்திரப்படும் […]

Read More…

தண்ணீர்.

”அசோகமித்திரனின் கதைகளில் யாரும் சண்டையிடுவதோ, உரக்க விவாதம் செய்துகொள்வதோ இல்லை. மத்தியதர மனிதர்கள் தங்கள் நெருக்கடிக்குள் உழன்றபடியே மீட்சிக்காக காத்திருக்கிறார்கள்,”. ”100 சிறந்த சிறுகதைகள்” தொகுப்பில் அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் முன்னுரை. “தண்ணீர்” நாவல் எஸ்.ராவின் முன்னுரையை வழிமொழிகிறது. மத்தியதர சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரை மையமாக வைத்து நடைபெறும் சம்பவங்கள், அதிகார தோரணைகள், அத்துமீறல்கள் என அன்றாடங்களை அழகாக எழுத்தில் காட்சிபடுத்தியிக்கிறார். 1971ல் எழுதப்பட்டிருந்தாலும் 2015லும் நம்மால் கதையின் சூழ்நிலைகளுக்குள் பொருத்திக்கொள்ள முடிகிறது. […]

Read More…

வாடிவாசல் : சி.சு.செல்லப்பா

1950களில் எழுதப்பட்ட கதை. தனது தந்தை செல்லியன் குடல் சரிந்து இறந்துபோக காரணமான வாடிபுரத்து சமஸ்தானத்து காளை ”காரி”யை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் பிச்சி, செல்லியனின் வீரதீரபிரதாபங்களை அவரின் மகனென்று தெரியாமல் பிச்சியிடமே விவரிக்கும் உள்ளூர்கார கிழவர். முதலாவதாய் திட்டிவாசலை தாண்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் செல்லாயி கோயில் காளை, இருபுறமிருந்தும் பாய்ந்து அணையவருபவர்களை சீரி, திமிலை சிலிர்ப்பியபடி ஆற்றுமணல் நோக்கி ஓட்டமெடுக்கும் காளைகள். அணைமரத்தோடு நெஞ்சணைத்து “காரி”யை எதிர்பார்த்தபடி பிச்சி, மச்சானின் எண்ணம் நிறைவேற தோள்கொடுக்க அருகில் […]

Read More…