கண்டம் சொல்லி பழகும் பயிற்சி தகிட தகிட தகிட தகிட (4 தகிட சொல்லி, 4 அட்சரம் தள்ளி சொல்ல ஆரம்பிக்க வேண்டும்)தாக்கு தீக்கு கீக்கு டாக்கு கும்குதத் தீக் கிட் டக் கும்ம்ததிகிடகும் குறியீடு(Notation) தகிட தகிட தகிட தகிடத; தி; கி; ட; கும்;த, தி, கி, ட, கும்,ததிகிடகும் குறிப்பு : த = ஒரு சொல்த, = ஒரு சொல் + ஒரு கார்வைத; = ஒரு சொல் + இரண்டு […]
Category: Uncategorized
திஸ்ர கதியில் பஞ்சநடை- ஆதி தாளம்
கண்டம் சொல்லி பழகும் பயிற்சி தகிட தகிட தகிட (3 தகிடசொல்லி, 3 அட்சரம் தள்ளி சொல்ல ஆரம்பிக்க வேண்டும்)தாக்கு தீக்கு கீக்கு டாக்கு கும்குதத் தீக் கிட் டக் கும்ம்ததிகிடகும் குறியீடு(Notation) தகிட தகிட தகிடத; தி; கி; ட; கும்;த, தி, கி, ட, கும்,ததிகிடகும் குறிப்பு : த = ஒரு சொல்த, = ஒரு சொல் + ஒரு கார்வைத; = ஒரு சொல் + இரண்டு கார்வை த;, = […]
தேணுகாவின் வாரிசு..
சற்றே நீண்ட பதிவு… ஹம்சத்வனியில் “வாதாபி கணபதிம்” வாசித்து முடிந்த கையோடு, திருமண தம்பதிகளுக்கு கை கொடுக்க, மேடை ஏறிவிடுவீர்கள் எனில் முதல் இரு பத்திகளோடு முடித்துக்கொள்ளலாம். திருப்புகழ் பாடி நிறைவு செய்கையில் மட்டும், வாசிப்பவர்களை நிமிர்ந்து நோக்குபவராயின் நேராக கடைசி பத்திக்கு செல்லலாம். தனி ஆவர்த்தர்தனத்துக்கு மட்டும் தனி கவனம் கொடுப்பவர் எனில் பதிவின் மத்திமத்தில் ஆரம்பிப்பது உத்தமம். ஆரம்ப ஆலாபனை முதல், மங்கள முடிவுவரை, முழு கச்சேரியையும் கேட்டு உய்பவர் எனில் முழுமையாய் தொடரவும். […]
பிரபாகரன் – வாழ்வும் மரணமும்…
இரண்டாயிரத்து ஒன்பதின் மே மாதம். அமெரிக்க வாழ்க்கை. இந்தியாவிலிருந்து வந்திருந்த அப்பா அம்மாவிற்காக தமிழ் சேனல் இணைப்பு கொடுத்திருந்த சமயம். “மட்டகளப்பில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில்… ” என்று ஆரம்பிக்கும் ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் செய்தியை, பால்ய பருவத்தின் அனேக நாட்களில் கேட்டு வளர்ந்தவன் தான். திடீரென பார்க்க நேர்ந்த செய்தி…. இன்றளவும் மனக்கண்ணை விட்டு அகலாமல் நின்றிருக்கும் நிகழ்வு. பிரபாகரனின் மரண செய்தி. பல புத்தங்களை படித்தாயிற்று. இரண்டாயிரத்து இருபத்தி ஒன்னிலும் ஈர்க்கத்தான் செய்கிறார். “வாழ்வும் மரணமும்” என்ற உபதலைப்போடு பிரபாகரனின் […]
அவரும் நானும்
பல்லிவாலில் தொடங்கி முதலைவாலில் முடியும் பெரும் பட்டியல் தமிழ் புத்தக வகைமையில் உண்டு. 1) : இந்த புத்தகம் சுயசரிதைக்கான வடிவை, இலக்கணத்தை கொண்டிருக்கிறதா? 2) : அவரைப்பற்றிதான் எல்லாம் தெரியுமே? இந்த புத்தகத்துல அப்படி என்னத்த இதுவரைக்கும் நாம கேள்விப்பட்டிறாத தகவல் இருந்துவிடப்போகுது?அனேகரும் இரண்டாம் கேள்வியை மனதில் எழுப்பிக்கொண்ட பிறகே, இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பார்கள். இதற்கான பதிலை முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர்.முதல் கேள்விக்கு வருவோம்…. “ஏண்ணே… கலைஞர் தனிப்பேச்சில உங்ககிட்ட சொன்னத எதுக்கு பொதுவெளியில […]
நான் ஷர்மி வைரம்.
கயிற்றின்மேல் நடக்ககூடிய சமாச்சாரம்.கொஞ்சம் பிசகியிருந்தாலும் எதிர்மறை பரிமாணம் கொண்டிருக்கும்.”நான் ஷர்மி வைரம்”. இதுதான் தலைப்பு. முப்பரிமாண கதைசொல்லல்,” அவன்” என்றொரு நான்காவது திரி. அது பற்றிக்கொள்கையில் வேகமெடுத்து முடிவுக்கு வரும் நாவல். கதைசொல்லியின் வலிகளை,சந்தோஷத்தை கடத்தும் எழுத்துநடை.அடுத்தது என்ன? என்ற உந்துதலோடு முடியும் அத்தியாயங்கள்.நேர்த்தியாய் கட்டமைக்கப்பட்டு கிளைமாக்ஸில் கட்டவிழும் புதிர்.பிரத்யோக முன்சீட் வைக்கப்பட்ட டிவீஎஸ் எக்ஸெல் வண்டியில் கடல்காற்று முகத்திலறைய மகிழ்ந்திருந்த தருணங்கள், கண்ணாடி தடுப்புகளுக்குள் மாட்டி சுழலும் மின்மினிபோல் மாறியது ஏன்?. அதன்பின்னான காதல்,காமம்,கவலை,கண்ணீர்.திரைத்துறை வாய்ப்பு […]
வெண்முரசு வாசிப்பனுபவம்
அன்பின் ஜெ,வணக்கம். வெண்முரசு என்ற தலைப்பில் மகாபாரதத்தை தொடர் நாவல்களாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.இதுவரை 13 நாவல்கள் முடிந்துவிட்டது, பாராட்டுக்கள்!!! ,14வது நாவலை தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்!!!. வெண்முரசைப்பற்றி முழுதும் அறியாமல் வெறும் முறைமைச்சொற்களாலான மேற்கண்ட வரிகளே 2017 மார்ச் வரை என்னுடைய புரிதல். ஒத்திப்போடபட்டுக்கொண்டே இருந்த அந்த தருணம் தொடங்கியது சென்ற மார்ச் மாத இறுதியில் ”கீழ்வாலை குகை ஓவியங்கள்” பார்க்க சென்ற பயணத்தின் ஒரு புள்ளியில். மங்கிய ஒளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு குகை ஓவியங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் “ஏம்பிரபு, வெண்முரச […]
கங்காபுரம்.
கங்காபுரம்அ.வெண்ணிலா எழுதிய வரலாற்று நாவலின் மதிப்புரை. எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. https://www.jeyamohan.in/136575/ ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட நாவல். முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு,எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது. இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாக ஊற்றுமுகமாக அமையும் தருணங்களை, அதனூடாக […]
மூன்றுவிரல்…
சென்னை, டைடல் பார்க்.வடகிழக்காய் ஓங்கி நிற்க்கும் கட்டிடத்தின் ஆறாவது தளம். மாலை நேர தேநீர் இடைவேளைகளில் அந்த 10க்கு 8 செவ்வக பகுதியை கடந்துசெல்கையில் கண்கள் அன்னிச்சையாக அவரை தேடும். ஸ்பீக்கர் போன் வழியே தெறித்துக்கொண்டிருக்கும் கரகரப்பான வெளிதேசத்து குரல்களுக்கு காதையும், லேப்டாப் ஸ்கிரீனுக்கு கண்ணுமாய், இடது கையால் மோவாயை தாங்கியபடி அவர்…. இன்றைக்கு பேசிவிடலாம் என்று ஒவ்வொருமுறை நினைத்தாலும் அந்த கரகரகுரல்கள் அமைதியாவதற்கான சாத்தியகூறுகள் புலப்படாமல் கடந்துசென்றுவிடுவதுண்டு. பிறிதொருநாள் சந்திக்கவிழைந்து அனுப்பிய செய்திக்கு “i am […]
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் – பாரதி மணி.
”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”.”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம். ”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமலும் […]