நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம்……….

சென்ற வாரம் நியூயார்க் நகரின் பிரதான பகுதியில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இருக்க வேண்டி காலை 3 மணிக்கு எழுந்து …….முடித்து, ……..டித்து………..த்து ………….. து…….. (நான் மட்டும் காலைல எழுந்த உடனே புதுசா என்ன பண்ணிடபோறேன்……. எல்லாரும் பண்ணுறதுதான்) காரில் அமர்ந்து ஜன்னல் வழிவந்த பனிக்காற்றை புறந்தள்ளி, இதமான செயற்க்கை வெப்பத்திற்க்கு உடம்பைக்கொடுத்து வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் விரட்ட ஆரம்பித்தேன், துணையாய் காதின்வழி நரம்பில் ஊடுருவும் கதிரியின் சாக்ஸபோன்……………
நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூவில் காரை சொருகி, ஆறாவது அவென்யூ நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் மணி 6.30. பலமுறை நியூயார்க் சென்றிருந்தாலும் பின்னிரவு கேளிக்கைகள் முடிந்து, நகரம் சற்றே சாவகாசமாய் இருக்கும் காலை நேரத்தில் செல்வது இதுவே முதல் முறை.
வந்த வேலை முடித்து சற்றே ஆசுவாசமாய் தெருக்களில் நடக்க தொடங்கினேன் கழட்டிவிட்ட எருமை போல (நன்றி விக்னேஸ்வரி). கழுத்தில் கேமராவுடன் நிதான நடையில் தெருக்களை விழுங்கி தனிமையில் சுத்துவதில் தனி சுகம்.
டைம் ஸ்கொயர் பகுதி

சைக்கில் கேப்பில் காரை நுழைக்கும் நம்ம ஊர் ஆட்கள். நியூயார்க்கில் ஓ(ட்)டும் பெரும்பாலான டாக்ஸி-டிரைவர்கள் இந்தியர்கள், கூடவே நமது எல்லைக்கோட்டவர்களும்…

கூட்டங்கூட்டமா கிளம்பிட்டாய்ங்க………
ஆரவார தெருக்கள் அமைதியாய்………….
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகும் “ராக்-பில்லர் சென்டர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *