கயிற்றின்மேல் நடக்ககூடிய சமாச்சாரம்.கொஞ்சம் பிசகியிருந்தாலும் எதிர்மறை பரிமாணம் கொண்டிருக்கும்.”நான் ஷர்மி வைரம்”. இதுதான் தலைப்பு. முப்பரிமாண கதைசொல்லல்,” அவன்” என்றொரு நான்காவது திரி. அது பற்றிக்கொள்கையில் வேகமெடுத்து முடிவுக்கு வரும் நாவல். கதைசொல்லியின் வலிகளை,சந்தோஷத்தை கடத்தும் எழுத்துநடை.அடுத்தது என்ன? என்ற உந்துதலோடு முடியும் அத்தியாயங்கள்.நேர்த்தியாய் கட்டமைக்கப்பட்டு கிளைமாக்ஸில் கட்டவிழும் புதிர்.பிரத்யோக முன்சீட் வைக்கப்பட்ட டிவீஎஸ் எக்ஸெல் வண்டியில் கடல்காற்று முகத்திலறைய மகிழ்ந்திருந்த தருணங்கள், கண்ணாடி தடுப்புகளுக்குள் மாட்டி சுழலும் மின்மினிபோல் மாறியது ஏன்?. அதன்பின்னான காதல்,காமம்,கவலை,கண்ணீர்.திரைத்துறை வாய்ப்பு முன்னரே அமைந்திருக்குமெனில் அனாயாசமாக கையாண்டு திரைப்படமாக கொண்டுவந்திருப்பார் என்ற வருத்தம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
***************************
நான் ஷர்மி வைரம்
Cable Sankar
ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
176 பக்கங்கள்
180 ₹
***************************