அப்பம் வடை தயிர்சாதம் : பாலகுமாரன்

புரோகிதத்தில் ஆரம்பித்த ஒரு தலைமுறை, ஓட்டல் நடத்தி, வணிகம் செய்து ஐந்தாம் தலைமுறை வாரிசுக்கு அமெரிக்க மருத்துவமனையில் வேலை நியமனம் கையில் கிடைக்கிறது. தம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு குடும்ப சகிதமாய் தஞ்சை ஜில்லாவிற்க்கு பயணிக்கிறார்கள். ஐந்தாம் தலைமுறை வாரிசு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணும் உடன் பயணிக்கிறார். நான்காம் தலைமுறை பாட்டி ஒருவர் “எங்க பரம்பரை எப்பேர்பட்டது தெரியுமாக்கும்” என்று வீட்டுக்கு மாட்டுப்பொண்ணாய் வரப்போகும் பெண்ணிடம் விவரிப்பதாய் நகர்கிறது கதை.

புத்தகம் முழுவதும் விவரணை,விவரணை,விவரணை. கதையில் சொல்லப்படும் பல இடங்கள் நேரில் பரிச்சயமான இடங்களாதலால் படிக்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு.

இப்புதகத்தை படிக்கையில் மாயவரம் ஜங்ஷனில் உக்கார்ந்து கொண்டு இன்னொருமுறை படிக்கவேண்டும் என்று தோன்றவைத்தது பா.ரா.வின் சமீபத்திய கட்டுரை ஒன்று (எந்தெந்த புத்தகத்தை எந்தெந்த சூழ்நிலையில் படிக்கவேண்டுமென்று எழுதியிருப்பார்).

சுதேசி காலத்திலிருந்து செல்பிக்கு முன்பான காலகட்டங்களை தொட்டுச்செல்கிறது கதை.

“எவ்வளவு உயரம் சென்றாலும் பழசை மறக்கக்கூடாது”. கதையின் சாரம்சம் இதுதான். பாலகுமாரன் அவர்கள் இதனை கதையின்வழி நம்மனக்கண்ணில் காட்சிபடுத்துகிறார்.

எங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளைக்கும் “அப்பம்,வடை,தயிர்சாதம்”ன்னு மாயவரம் ஜங்ஷனில் கூவி விற்ப்பதற்க்கு நீங்க தான் சொல்லித்தரணும்” ஆறாம் தலைமுறைக்காக வைக்கப்படும் கண்ணீர் வேண்டுகோளுடன் முடிவடைகிறது கதை (படிக்கும் நம் கண்களிலும் கண்ணீர்த்துளிகள் நிச்சயம்).

இதை எழுதும் சமயம் திரு.பாலகுமாரன் அவர்கள் சுவாசப்பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருக்குறார்,அவர் பூரண நலம்பெற நம்முடைய பிரார்த்தனைகள்.

————

அப்பம் வடை தயிர்சாதம்
பாலகுமாரன்
விசா பப்ளிகேஷன்
ரூ 160.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *