விழாக்கோலம் பூண்டிருந்த வாணிமஹாலில் உள்நுழைகையில் ஒரு கையில் அயப ஹஸ்தமும், மறு கையில் வரத ஹஸ்தமுமாய் அபிநயத்தில் பிளக்ஸ் போர்டில் வரவேற்றார் தபஸ்யா. முன் வரிசை மைய நாற்காலி ஒன்றில், அருகிலிருந்த கிளீவ்லேண்ட் சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தார். ”அற்புதக் கலைஞர் பழனிவேல்” என்று நிகழ்வின் தொகுப்பாளர் சந்திரமோகன் அவர்களால் அழைக்கப்பட்ட ஏ.கே.பி.. மணி நாலடிக்க நிமிஷங்கள் இருக்கையில்,வெளீர் உடையில் மேடைக்கு வந்தமர்ந்தார்கள் மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணன் – வெங்கடேசன் சகோதரர்கள் மற்றும் சிறப்பு தவில்கள், மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன், சமீபத்தில் […]
ஆறும்-ரெண்டும்-ஒண்ணும்
புதன் இரவு 1 மணிக்கு அலுவலக மெய்சிகர் சந்திப்பு ஒன்றுக்காக காத்திருக்கையில், 2026 சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இருந்து ஒரு கையில் எடுக்கமுடிந்தவைகளை மேலோட்டமாக எடுத்ததில் வந்தவை ஒன்பது. எட்டில் ஆறு சிறுகதை தொகுதி. ஒரு (பெரு)நாவல், ஒரு குறு நாவல் மற்றும் ஒரு கட்டுரை தொகுதி. ஆறு சிறுகதை தொகுதிகளிலும் இருந்த தலா ஒரு கதையும், இரு நாவல்கள் மற்றும் கட்டுரை தொகுதியில் இருந்து சில பக்கங்களையும் படிக்க முடிவு செய்து, ரெண்டே […]
புளிக்க வைத்த அப்பம் – அ.முத்துலிங்கம்
மென்காற்றின் ஏகாந்தமாய் முதல் பத்தியும், சாட்டை சொடுக்கின் விதிர்ப்பாய் இரண்டாம் பத்தியும் இருப்பதை அ.முத்துலிங்கத்தின் பெரும்பாலான சிறுகதைகளில் கவனித்து இருக்கலாம். எழுத்தாளர் ஒருவரின் மனைவியின் அழைப்பின் பேரில், விருந்துக்கு செல்வதும், அவர்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பதும் தான் கதை. விருந்து உண்கையில், நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களும், விருந்துக்கு அழைத்த யூதப் பெண்மணி ஓராவின் அம்மா விருந்து மேஜையில் அடுக்கி வைத்து இருக்கும் பலவகை பதார்த்தங்களையும். எதனால் அவ்வாறு செய்து இருக்கிறார் என்பதை மையமாக கொண்ட சிறுகதை. […]
கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்.
கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனின் பணயக்கைதியாக இருந்து வீடு திரும்பிய பின் எடுத்த பேட்டி என்று நினைவு. வீரப்பனின் கஸ்டடிக்குள் இருந்த ஆரம்ப நாட்களில் சிரமப்பட்டாலும், நாட்கள் செல்ல செல்ல அந்த சூழலுக்கு தான் ஒன்றிப்போனதையும், எப்போது வெளியேறுவோம் என்று நினைப்பிலிருந்து ஏன் வெளியேறனும் என்ற எண்ண ஓட்டத்தை அடைந்ததை பற்றி குறிப்பிட்டு இருப்பார். ”கலாதீபம்” என்ற பெயரில் கொழுப்பில் இயங்கும் லாட்ஜ் ஒன்று கருவாட்டு மொத்த வியாபாரம் செய்யும் தமிழ் வியாபாரி ஒருவரால் நடத்தப்படுகிறது. இரவு […]
மூன்று புன்னகைகள்
2025 டிசம்பர் 20,21 தேதிகளில் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வு குறித்து எழுதிய கட்டுரை. https://www.jeyamohan.in/226820 […]
ஜெப்னா பேக்கரி – வாசு முருகவேல்
இயக்கம் தன்னை பிடித்துக் கொண்டு போன அன்று, பேக்கரியில் தான் செய்து அடுக்கியிருந்த பதினெட்டு மரக்கறிப்பணிஸ்களை சிரிப்புடனும் கண்களில் நீருடனும் நினைத்துப் பார்ப்பதுடன், தனக்கும் மச்சாளுக்கும் இரு பணிஸ்களை வாடிக்கையாக வந்து நிற்கும் அரவிந்தன் இப்போதெல்லாம் என்ன செய்வான் என்று கவலைப்படும் சிவா.. பிறவியெடுத்தது பொன்னுத்துரையர்,ராசாமணியர்,விசுவர்,முத்துலிங்கத்தார் நால்வரின் மிளகாய்த் தோட்டங்களை பத்திரமாய் பாதுகாக்கவும், கற்கள் எறிந்து கிளிகளை கலைக்கவும் இருக்குமோ என்றென்னும் வண்ணம் வாழ்வின் மீது யாதொரு புகாரும் இல்லாமல் இருக்கும் கொசுணாமணியர். நல்லது செய்ய செய்ய […]
ஆக்காண்டி – வாசு முருகவேல்
ஈழ நிலத்தின் கிழக்கு பகுதியில் கதை ஆரம்பமாகிறது.உயிரும், உதிரமும் பொருட்டாக மதிக்கப்படாத காலநிலை.பரஞ்சோதிக்கு இரு வாரிசுகள். “உங்கட மூத்தவன் புலியில தானே…?” என்ற கேள்விக்கு மகனும், மகளும் தன்னை பார்க்கையில், தன் மனிசி மனோன்மணி மூன்றாவதுக்கு ஓப்புக்கொள்ளவே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கும் பரஞ்சோதி. அலைகழிப்புகளில், ஆலயங்களும், மசூதிகளும், தேவாலயங்களும் தீக்கிறையாக்கப்படுகின்றன. ஒருபோது வசந்தத்தை கடந்து வந்திருக்கு வாய்ப்பில்லாத நஜீப்.. ஊர்காவல் படையின் சிறு பகுதிக்கு தலைமை தாங்க ஆரம்பித்து, இலங்கை பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட கூட்டங்களில் […]
காசா பாட்டர் – ஆய்ஷே ஓவ்யூர் (தமிழில் காயத்ரி ஆர்)
இரண்டடுக்கு மொழிபெயர்ப்புகளை தாண்டி கைக்கு வரும் கதைப்புத்தகம் எவ்வாறு இருக்கவேண்டும்? சுழன்றடிக்கும் சொல்லாடல்களும், வித்வத்தைக் பிரஸ்தாபிக்கும் இடைச்செறுகல்கள் இல்லாமலும்,மூலப்பிரதிக்கு அணுக்கமானதாகவும் வரக்கூடிய மொழிபெயர்ப்புகள், தனித்துவம் பெரும். துருக்கி மொழியில் இருந்து டெனிஸ் வெப்பரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆய்ஷே ஓவ்யூரின் “காசா பாட்டர்” நாவலை தமிழில் மொழிபெயர்திருக்கிறார் காயத்ரி. ரைமண்டோ என்ற கட்டிடக் கலை நிபுணர் இரு போர்வைகள் செய்ய ஆசைப்படுகிறார். வெறுமனே போர்வைக்கு ஆசைப்பட்டு இருந்தால் இந்த புத்தகம் வந்திருக்காது. போர்வையில் பெண் முகம் ஒன்றை வரைய, […]
வீ அட் நாம் – அருணா ராஜ்
நிகர்மொழி பதிப்பக அச்சகத்தில் அச்சடிக்க ஆரம்பித்ததும் அவசர கதியில் கொண்டு போய் சேர்ந்த்திருப்பார் போல… இருபத்தியிரண்டு அத்தியாயங்கள் எழுதி மறுபடியும் சுணங்கி, கடைசி அத்தியாயங்களை முடித்து அச்சுக்கு சேர்ப்பித்த கதையை என்னுரையில் சுவாரஸ்யமாக படிக்கலாம். பயணமா – இன்பச் சுற்றுலாவா எந்த வகைமைக்குள் அடக்குவது என்பது குறித்து , எழுத்தாளர் அதிஷா, முந்தைய முத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்ததை, இந்த புத்தகத்துக்கும் வழிமொழிகிறார். ”இப்பல்லாம் யாரு மேடம் பயண நூல்களை வாசிக்கிறாங்க” வாராந்திர பத்திரிக்கை ஆசிரியர்களால் […]
ராக்கெட் தாதா – ஜி.கார்ல் மார்க்ஸ்
அந்தி சாயும் நேரத்தின் மேல் ஆசிரியருக்கு என்ன மயக்கமோ தெரியவில்லை, பிற்பகலின் நிறைவையும், இரவின் ஆரம்பத்தையும் கைக்கொள்ளும் அந்த மெல்லிய கோடு, பெரும்பாலான கதைகளில் வெவ்வேறு சொற்களில் விவரணைகளாக இடம்பிடித்துவிடுகிறது. தனது கண் முன்னே, இருள் பனியை போல படர்ந்து நிறைத்ததைப் பார்த்துக்கொண்டே சாய்ந்திருந்தார் சட்டநாதன். காஃபியின் சுவை நாக்கில் மிச்சமிருந்தது. பித்தளை கூஜாவில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்தார். இன்னொரு மடக்கு எடுத்து கொஞ்ச நேரம் வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு மெல்ல […]